பட்டப்பகலில் பம்பலபிடியில் நடந்த சம்பவம்- வெளியான CCTV காணொளி

பட்டப்பகலில் பம்பலபிடியில் நடந்த சம்பவம்- வெளியான CCTV காணொளி

பம்பலபிடிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை இரண்டு நபர்கள் திருடிச் செல்லும் காட்சியொன்று அங்குள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ளன.

சந்தேக நபர்களினால் திருடிச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி பொரள்ளை பகுதியில் வைத்து கைவிடப்பட்டு சென்றுள்ளதாக பொரள்ளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் குறித்த முச்சக்கர வண்டியை பம்பலபிடிய-எலிபேங்க் வீதியில் வைத்து திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருடர்களினால் டிக்மன் வீதியில் உள்ள உந்துருளி ஒன்று திருடிச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் திருடிச் செல்லப்பட்டுள்ள உந்துருளிகள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591580 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல் வழங்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.