சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

சிங்கப்பூரில் இருந்து 283 இலங்கையர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இன்று (12) மாலை 5 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களுக்கு காட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.