இன்றைய ராசி பலன் 11 ஆகஸ்ட் 2026
மேஷம் ராசி பலன்
![]()
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட முயற்சித்தால் நன்மை உண்டாகும். இன்று மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆலோசனைகளை குறிப்பெடுத்து கவனமாக முடிவெடுக்கவும். உங்களுடைய தனிப்பட்ட வேலை அல்லது குழு பணிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். காதல் விஷயத்தில் உறவு ஆழமடையும். துணையுடன் இருக்கக்கூடிய மனக்கசப்பு தீரும்.பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு எதிர்பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் கேதுடன் இருப்பதால், எந்த ஒரு வேலையையும் தைரியமாக செய்து முடிக்க முடியும். உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வீட்டின் அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காக அதிக செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது எல்லாவிதத்திலும் நன்மை தரும். உங்கள் தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் சந்திரனும், குருவும் இணைந்து இருப்பதால் உங்கள் குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய சிந்தனை மிக்க பேச்சு மற்றும் செயல்பாடு அரசாங்கத்தின் கௌரவத்தை அல்லது விருதை பெற்று தரும். உங்களுடைய வணிகம் கூட்டாளிகள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவு பெறுவீர்கள். உங்களுடைய நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்பதால், கடன் சுமையை குறைய வாய்ப்புகள் உண்டு.
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் குரு உச்சம் பெற்றும், அவருடன் சந்திரனும் இணைந்திருப்பதால் உருவாகும் கஜகேஷரி யோகம் காரணமாக உங்களுடைய செல்வ நிலை அதிகரிக்கும். நீண்ட கால திட்டமிடலை நோக்கி பயணிப்பது வெற்றியை தரும். உங்களுடைய உறவு நிலையானதாக மாறும். அரசியல் மற்றும் சமூக துறைகளில் மேற்கொள்ளக்கூடிய பணிகள் வெற்றி அடையும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு.ஆரோக்கியத்தில் கவனம் குறிப்பாக கண் தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தொழில் அல்லது வேலை தொடர்பாக பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். சில புதிய பொறுப்புகளை கையாள வேண்டியது இருக்கும். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான சில நல்ல வரம் தேடி வர வாய்ப்புகள் உண்டு.இன்று நீங்கள் புதிய பணிகளையோ அல்லது திட்டங்களே மேற்கொள்ள சாதகமான பலன்கள் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை காரணமாக உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் எதிர்பார்த்த நல்ல பலனை தரும். தேவையற்ற செலவுகள் தவிர்த்து உங்களுடைய நிதி திட்டமிடல் பெரிய அளவில் லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் ஒரு இனிமையான சூழல் நிலவும். வேலையில் திதி மாற்றங்கள் காண வாய்ப்புகள் உண்டு. இன்று எதிர்பாலினத்தவர்களின் ஆதரவு மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்கள் இன்று நீங்கள் பெரியவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நல்ல ஆலோசனை வாய்ப்புகள் மூலம் பயனடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி தொடர்பாக சட்ட மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கவனமாக பரிசீலித்த பின்னரே எந்த ஒரு முடிவுகளை எடுங்கள். நிலுவையில் உள்ள வீட்டுப் பணிகளைச் செய்து முடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். புதிய பணிகள் அல்லது திட்டங்களை மேற்கொள்ள சாதகமான நாளாக இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலை அல்லது வணிகம் தொடர்பான விஷயங்களை சிலரின் ஆலோசனை உங்களுக்கு உதவும். நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய நிதி நிலை, தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். அதனால் புதிய பணிகள் அல்லது திட்டங்களை மேற்கொள்ளலாம். மறைமுக எதிரிகளின் சில இடர்பாடுகள் சந்திக்க நேரிடும். காதல் விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் உண்டாகும். கடந்தகால பொறுப்புகளில் இருந்து விடுபடலாம். பணியிடத்தில் உங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படும். இது உங்கள் திட்டங்களை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய தன்னம்பிக்கையை தரும். தொழில், வியாபாரம் செய்யக் கூடியவர்கள் போட்டியாளர்களால் சில சிரமங்களை சந்திப்பீர்கள். சில அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கும். இதனால் உங்களுடைய செலவுகள் விசயத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்துடன் மாலை நேரத்தை செலவிடுங்கள்.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் ராசி சேர்ந்தவர்களுக்கு தொலைதூர பயணம் செல்ல நேரிடும். உங்களுடைய செயல்பாடுகளில் வெற்றிக்கான சாதகமான சூழல் உருவாகும். சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். ஒரு பழைய நண்பர் அல்லது உறவினர்களின் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்னும் யாருக்கும் கடன் கொடுப்பது நல்லது கடன் வாங்குவதை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டில் எதிர்பார்த்து வெற்றிபெற கடின உழைப்பு தேவைப்படும்.
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய ராசிநாதன், சனி மீன ராசியில் சஞ்சரிப்பதால் அரசியல் துறையில் வெற்றி கிடைக்கும், தீவிர அரசியலில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. அதே சமயம் பிரபலமான நபர்கள் இந்த ஒரு கருத்தை கூறுவதிலும் நிதானத்தை, கண்ணியத்தை கடைபிடிக்கவும். இன்றைய கடின உழைப்பால் எந்த வேலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் உங்களின் போட்டியாளர்கள் போட்டியில் உங்களை விட பின்தங்குவார்கள். நாளின் பிற்பகுதியும் மங்களகரமானதாகவும், உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். தொண்டு விஷயங்களுக்காகவும் செலவுகள் ஏற்படலாம்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தனிப்பட்ட செல்வம் அதிகரிக்கும். நிதிநிலை தொடர்பாக பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது. அவசரக் காலத்திற்கான நிதியை ஒதுக்குவதில் திட்டமிடுவீர்கள். தாய்வழி குடும்பத்தாரின் மரியாதையையும் பெறுவீர்கள். உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் இரகசிய எதிரிகள் வதந்திகள் பேசுவார்கள், இது மாலையில் பிரச்சனையை உண்டாக்கும். உன்னுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க நிதி நிலையை சம நிலையில் பராமரிப்பதும், செலவுகளை கட்டுப்படுத்துவதும் அவசியம். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவு எடுக்கவும்.