அமைச்சு பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகள்...!

அமைச்சு பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகள்...!

ஜனாதிபதி கோட்டபய ராஜபபக்ச முன்னிலையில் இன்றைய தினம் 28 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்

இந்நிலையில் அமைச்சுப்பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சிலருக்கு இன்றைய தினம் அமைச்சுப்பதவியோ அல்லது இராஜாங்க அமைச்சு பதவியோ கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த யாப்பா அபேவர்தன, சுசில் பிரேம் ஜயந்த், அநுர யாப்பா அபேவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, எஸ் பி திசாநாயக்க, மகிந்த சமரசிங்க, ஜோன் செனவிரத்ன, ஆகியோரே அமைச்சு பதவிகளை எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொலநறுவை மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளை பெற்ற (111,137) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சு வழங்கப்படாமை இதில் விசேட அம்சமாகும்.

மேலும் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதாகவம், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.