
ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்ட தினேஸ் குணவர்தன!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மாவட்ட முதன்மை வேட்பாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தினேஷ் குணவர்தனவே மிக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் அல்லது இரண்டாம் இடத்தை பெற்றனர்.
எனினும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தினேஷ் குணவர்தன விருப்பு வாக்கு பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட தினேஷ் குணவர்தன ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 451 விருப்பு வாக்குகளை பெற்றார்.
எனினும் இம்முறை தேர்தலில் அவர் 58 ஆயிரத்து 287 வாக்குகளை மாத்திரமே பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 39 ஆயிரத்து 164 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் குழுத் தலைவராக கடமையாற்றிய தினேஷ் குணவர்தன, தற்காலிக பொறுப்பு அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராகவும் நாடாளுமன்ற சபை முதல்வராகவும் கடமையாற்றியுள்ளார்.