St. Bridget's Convent 125 ஆண்டு கால வரலாற்றுப் பயணம் கோலாகலமாக ஆரம்பம்!
கொழும்பு, புனித பிரிஜட் கன்னியர் மடத்தின் (St. Bridget’s Convent) 125ஆவது ஆண்டு நிறைவு விழா அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, "Shamrock Trail 2026" எனும் விசேட பாதயாத்திரை மற்றும் களியாட்ட நிகழ்வு நேற்று முன்தினம் (04) கோலாகலமாக ஆரம்பமானது.
பாடசாலையின் நீண்டகால வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், தற்போதைய மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
பாதயாத்திரையானது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, நகரின் முக்கிய வீதிகள் ஊடாகச் சென்றது. வண்ணமயமான உடைகள், இசைக்குழுக்களின் அணிவகுப்பு மற்றும் பாடசாலையின் அடையாளத்தைப் பறைசாற்றும் சின்னங்களுடன் இந்த நடைபவனி நடைபெற்றது.
வழியெங்கும் பாடசாலை கீதங்கள் முழங்க, பங்கேற்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடசாலையின் 125 ஆண்டு காலப் பயணத்தை நினைவு கூர்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவிகள் ஒன்றுகூடி தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
பாதயாத்திரையைத் தொடர்ந்து, கொழும்பு தர்ஸ்டன் மைதானத்தில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.