
இந்தியாவுடனான உறவு குறித்து பிரதமர் மஹிந்த கருத்து
இந்தியா – இலங்கைக்கு இடையில் உள்ள இருதரப்பு உறவுகளை முன்கொண்டு செல்வதற்கும் புரிந்துணர்வு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கும் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நான் எப்போதும் கூறுவதைப் போன்று இந்தியா எமது நட்பு நாடு அதேபோன்று உறவு நாடு.
பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட வாழ்த்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் தான் எனக்கு முதன்முதலில் வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்” என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்