வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 227 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 227 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 227 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 13 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேபோல லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து 107 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலும் இங்கிலாந்தில் தங்கியிருந்த 107 இலங்கையர்களை இன்று அதிகாலை 5.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.