இனி ஏ.சி தேவையில்ல; கரண்ட் பில்-க்கு எண்ட் கார்டு: வீட்டை ஐஸ்கட்டியாக மாற்றும் 'பெயிண்ட்' வந்தாச்சு!

இனி ஏ.சி தேவையில்ல; கரண்ட் பில்-க்கு எண்ட் கார்டு: வீட்டை ஐஸ்கட்டியாக மாற்றும் 'பெயிண்ட்' வந்தாச்சு!

உலகிலேயே மிக வெள்ளையான க்ரையோ பெயிண்ட் ஏசி பயன்பாட்டிற்கு மாற்றாக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பேரியம் சல்பேட்’ கலந்த இந்த பெயிண்ட், தன் மீது விழும் சூரிய ஒளியில் 98% அப்படியே திருப்பி அனுப்பிவிடும்.

பூமி நாளுக்கு நாள் வெப்பமயமாகி வருவதால், நம்மில் பலரும் ஏசி பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால், ஏசியில் இருந்து வெளிவரும் வெப்பக் காற்று பூமியை மேலும் சூடாக்குகிறது என்பதுதான் கசப்பான உண்மை. ஆபத்தான சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசய பெயிண்ட் தான் ‘க்ரையோ பெயிண்ட்’ (Cryo Paint). நாம் கேள்விப்பட்ட 'கூல் ரூஃப்' (Cool Roof) பெயிண்ட்டுகளை விட, இந்த பெயிண்ட் அடித்த வீட்டின் கீழ் நின்றால் ஏசி-யே தேவையில்லாத அளவுக்கு அதிக குளிர்ச்சியை உணர முடியும்.

இது எப்படி வேலை செய்கிறது? 

விஞ்ஞானிகள் இந்த பெயிண்ட்டில் 'பேரியம் சல்பேட்' (Barium Sulfate) என்ற வேதிப்பொருளை கலந்துள்ளனர். இது 2 மாயாஜாலங்களை செய்கிறது. சாதாரண பெயிண்ட்டுகள் சூரிய வெப்பத்தை உறிஞ்சி வீட்டைச் சூடாக்கும். ஆனால், இந்த க்ரையோ பெயிண்ட் தன் மீது விழும் சூரிய ஒளியில் 98% அப்படியே திருப்பி அனுப்பிவிடும். The Deep Space Dump இதுதான் இதில் இருக்கும் அல்டிமேட் ட்ரிக். இந்த பெயிண்ட் உங்க வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, அதை அகச்சிவப்புக் கதிர்களாக மாற்றுகிறது. இந்த கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தை துளைத்து கொண்டு, எந்தத் தடையுமின்றி நேரடியாக விண்வெளிக்கே சென்றுவிடும். இதனால், கரண்ட்டே இல்லாமல் உங்கள் வீடு ஐஸ்கட்டி போல குளிரும்.

இது சந்தையில் கிடைக்கிறதா?

இப்போதைக்கு இல்லை. இது இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குச் சந்தைக்கு வரவில்லை. ஆனால், பெரிய டேட்டா சென்டர்கள் (Data Centers), டெலிகாம் டவர்கள், விண்வெளி கலன்களில் (Spacecrafts) தற்போது இது ரகசியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது சந்தைக்கு வரும்போது, சாதாரண பிரீமியம் பெயிண்ட் அடிக்கும் அதே செலவில்தான் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.

இதில் உள்ள சிக்கல்கள் என்ன?

இவ்வளவு சூப்பரான பெயிண்ட் ஏன் இன்னும் நம் கைகளுக்கு வரவில்லை? ஏனா இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த பெயிண்ட் மீது லேசாகத் தூசி படிந்தாலோ, அல்லது வானம் மேகமூட்டமாக இருந்தாலோ இதனுடைய பவர் (குளிர்விக்கும் திறன்) சுத்தமாக வேலை செய்யாது. வெயில் காலத்திற்கு ஓகே, ஆனால் குளிர்காலத்திலும் இது வீட்டை அளவுக்கு அதிகமாகக் குளிர்வித்து, உறைந்து போகச்செய்து விடும். எனவே, எந்த ஊரின் பருவநிலைக்கு இது செட் ஆகும் என்ற ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.