நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர் உற்சவமும் , மறுநாள் 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
மகோற்சவ காலத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் , மக்களுக்கான சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு சாரணர்கள் , சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியினர் உள்ளிட்டவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்
அத்துடன் மகோற்சவ காலத்தில் 42 படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் , விசேட போக்குவரத்து சேவைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
அத்துடன் பக்தர்களுக்காக குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை என்பவையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.