இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இலவச விசா! வெளியான அறிவிப்பு

இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இலவச விசா! வெளியான அறிவிப்பு

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை ஆன்மீக யாத்ரீகர்களுக்கான இலவச விசா சேவை (Free Visa Scheme) மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய விசா சேவை வழங்குநர் நியமிக்கப்பட்டமையால் இந்தச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

 

யாத்ரீகக் குழுக்கள்

இந்தநிலையில் ஜூலை ஏழாம் ஆம் திகதி முதல் மீண்டும் இச்சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இலவச விசா! வெளியான அறிவிப்பு | India Resumes Free Visas For Lankan Pilgrims

இதனடிப்படையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் 10 நபர்களுக்கு அதிகமான யாத்ரீகக் குழுக்களுக்கு விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

 

கண்காணிப்புச் செயல்முறை

இதனுடன் 12 முதல் 70 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் தரவுகளைப் (Biometric Data) வழங்குவது கட்டாயமாகும்.

இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இலவச விசா! வெளியான அறிவிப்பு | India Resumes Free Visas For Lankan Pilgrims

வயதான மூத்த குடிமக்களுக்காகச் சிறப்பு வேகக் கண்காணிப்புச் செயல்முறை (Fast-track process) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விசா கட்டணமின்றி இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையத்திற்கு (ICAC) சேவைக்கட்டணமாக (Service Fee) ரூ. 1,855 செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.