கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது..
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 880 பேராக பதிவாகியுள்ளது.
குறித்த நபர்கள் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.