இன்றைய ராசி பலன் 6 ஜூன் 2026
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று அந்நியர்களிடமிருந்து உங்களுக்கு திடீர் ஆதரவு கிடைக்கலாம். உங்களுடைய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக சிலரின் தேவையற்ற இடையூறுகள் உங்கள் லாபகரமான பாதையைத் தடுக்கலாம்; உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக எதிர்பார்த்த இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். நீங்கள் சிந்தனையுடன் செயல்பட்டால் உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களும் தோல்வியடைவார்கள். கட்டுமானப் பணிகள் தொடர்பான பணிகள் நிறைவடையும். சில நல்ல செய்திகள் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு நிறைய செலவுகள் ஏற்படலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று அதிகப்படியான உற்சாகமும், அவசரமும் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். சில நிதி மற்றும் குடும்பக் கவலைகள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம். இன்று உங்களை தேடி பல நல்ல செய்திகள் வந்து சேரும், பழைய நண்பர்களையும் சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகள் மற்றும் வேலை தொடர்பாக தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்க்கவும். நியாயமற்ற வழிகளில் செல்வத்தைச் சேர்க்க வேண்டாம். உங்களுடைய செலவுகளை மிகுந்த கவனத்துடன் செய்யவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அல்லது சச்சரவுகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் எதிலும் நிதானத்தை மற்றும் பேச்சில் இனிமையை கடைபிடிக்கவும். பொறுமையான செயல்பாடு உங்கள் மரியாதை கூடும், எதிர்பாராத ஆதாயங்களும் கிடைக்கலாம். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். உங்கள் செயல்களுக்கு எதிர்ப்பு கிளம்பலாம். குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாகத் தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். வேலை தொடர்பாக பரபரப்பான நாளாக இருக்கும். இது உங்களுக்கு சோர்வை தரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கல்வி அல்லது வேலை தொடர்பாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்ப சூழல் அல்லது வேலைப்பளு உங்களுக்கு மன அழுத்தம் காரணமாகச் சோர்வு அல்லது விரக்தி ஏற்படலாம். நீண்ட நாட்களாக முடிக்கப்படாத சில பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதி, உங்களுடைய வேலைகள் கவனம் செலுத்தவும். எந்த விதமான சூதாட்டம் அல்லது சட்டத்திற்கு விரோதமான விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அனைத்துப் பணிகளும் குறித்த நேரத்தில் நிறைவடையும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான பல அனுபவங்களைப் பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நற்பெயர் பல்வேறு துறைகளில் உயரும். நல்ல நாட்களின் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கொண்டாட்டங்கள் மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். நல்ல உணவு நீங்கள் வாய்ப்பு உண்டு. அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இன்று காலையிலிருந்து நல்ல செய்திகள் தொடர்ந்து வரும் என்பதால், நீங்கள் வெற்றிபெற விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் குறித்துச் சற்று கவலை ஏற்படலாம், ஆனால் புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள். அலுவலகத்தில் உங்களுடைய வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும், பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். சிலருக்கு வயிறு மற்றும் கண் தொடர்பான பிரச்சினைகள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம், இது பணியில் நிலையற்ற தன்மையை உருவாக்கலாம். ஆரோக்கியம் தொடர்பான பாதிப்பு இருக்கும் என்பதால் வேலையில் சரியான திட்டமிடல் தேவை. காலத்திற்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்டு முன்னேறுங்கள்; இன்று புதிய திட்டங்களை தொடங்குவதற்கு அதிகமானதாக இருக்கும். வேலைகளை கூட கவனமாக செய்ய வேண்டிய நாள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கலான பணிகள் நிறைவடையும் மற்றும் லாபகரமான புதிய முயற்சிகள் தொடங்கப்படும். இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக தரவுகளை கவனமாக சரி பார்க்கவும். சில முக்கியமான வேலைகளை முடிப்பது தொடர்பாக மன அழுத்தம் காரணமாகத் தலைவலி அல்லது குழந்தைகள் குறித்த கவலை ஏற்படலாம். இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உள்ளது சில புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வாகனம் மற்றும் வீடு தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். உங்களை தேடி வரக்கூடிய ஒரு நேர்மறையான செய்தி உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை அல்லது குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் புத்திசாலித்தனமான செயல்பாடு அனைவரிடமும் பாராட்டை பெற்று தரும். குடும்பத்தில் சில சலசலப்புகள் அல்லது அமைதியின்மை ஏற்படலாம். எனவே, முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று கடந்த தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று துணிச்சல் மற்றும் விடாமுயற்சியுடன் திட்டங்களை நிறைவேற்ற செயல்படுவது நல்லது; நண்பர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். அசையும் அல்லது அசையாச் சொத்து தொடர்பான குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய சூழல் ஏற்படும். குடும்ப விவகாரங்களைச் சரிசெய்வதில் நீங்கள் கவனமுடன் செயல்படவும். திட்டமிட்ட பணிகள் வெற்றிகரமாக அமையும்; நண்பர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உங்கள் வேலை தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். எதிலும் பிறந்த கண்ணோட்டத்துடன் செயல்படவும். போட்டிகளில் நல்ல வெற்றியை பெறலாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற சந்தேகங்களும், வாக்குவாதங்களும் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும். திட்டமிட்ட நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெறும்;இன்று நீங்கள் கடினமான பணிகளை கூட சரியாக நிறைவேற்ற முடியும். இது உங்களுக்கு பண வரவுக்கான நல்ல வாய்ப்புகள் அமையும். தாய்மாமன் வழியில் நன்மைகள் எதிர்பார்க்கலாம். பழைய நண்பர் ஒருவரின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று பணம் முதலீடு தொடர்பாக கவனமாக இருக்கவும். மீண்டும் ஒரு பெரிய முடிவை எடுப்பதற்கு முன் நிதானமான ஆராய்ச்சி தேவை.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சாதகமான காலம்; சாதுர்யமான அணுகுமுறையால் எதையும் சாதிக்க முடியும். சிக்கல்கள் தீரும்; உங்களுடைய எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். உணவுப் பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது, சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் அல்லது வணிக கூட்டாளிகளுடன் நிதி விவகாரங்கள் காரணமாகத் துணையுடன் ஒருவித இடைவெளி ஏற்பட்டாலும், உங்கள் அன்பு குறையாமல் இருக்கும். புதிய விஷயங்களை விவாதிப்பது மற்றும் பெரிய இலக்குகளை அடைவது தொடர்பாக திட்டமிடவும்.