ஸ்ரீலங்காவிற்கு விசேட விமானங்களை அனுப்ப முடிவு!

ஸ்ரீலங்காவிற்கு விசேட விமானங்களை அனுப்ப முடிவு!

உலகளாவிய ரீதியில் மாலுமிகளை இடமாற்றுவதற்கு ஏதுவாக இலங்கை காணப்படுவதால் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ், இலங்கையின் மத்தள விமான நிலையத்துக்கு மாலுமிகளை திருப்பி அனுப்பும் செயற்பாட்டுக்காக விசேட விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி முதல் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் 13வெளிநாட்டு மாலுமிகளுடன் நேற்றுமுன்தினம் பிற்பகல் 1.50 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் இசட் 28161என்ற இந்த விமானம் நேற்று 14 பிலிப்பைன்ஸ் மாலுமிகளுடன் இங்கிருந்து பிற்பகல் 2.15மணியளவில் பிலிப்பைன்ஸ் நோக்கிப் புறப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நாட்டுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், கப்பல்களின் பாதுகாப்பான செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் குழுவினரை மாற்றுவதற்கு வசதியான இடமாக இலங்கை சர்வதேச கப்பல் சமூகத்தின் மத்தியில் இந்த நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் இறுதி வாரத்திலிருந்து 50 இற்கும் மேற்பட்ட திருப்பி அனுப்புதல் மற்றும் மாலுமிகள் குழு பரிமாற்ற விமானங்கள் மத்தளவிலிருந்து இயக்கப்படுகின்றன.

குழு மாற்றங்கள் இலங்கை சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.