இன்றைய ராசி பலன் 4 ஜூன் 2026

இன்றைய ராசி பலன் 4 ஜூன் 2026

மேஷம் ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று லட்சியங்கள் நிறைவேற கூடிய நாள். எனவே இன்று நீங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வியாபாரம் தொடர்பாக கூடுதல் நேரம் கிடைக்க வேண்டியது இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் மற்றும் சரியான ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. சில காரணங்களுக்காக திடீரென பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. இன்று வேகத்தை கண்டுபிடித்தேன் நிதானமாக செயல்படுவது செயலையும் மேம்படுத்தும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் குடும்பத்தினர் ஒரு சுப நிகழ்வு குறித்து திட்டமிடுவது, விவாதிப்பதில் ஈடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த, தேவையான நிதி முன்னேற்ற நினைப்பீர்களே. இன்று மாலை நேரத்தில் உங்கள் வீட்டிற்கு சில விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். இன்று நீண்ட காலம் பயன் தரக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது அவசியம். உங்கள் வேகத்தை விட விவேகமான செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது.தொழில் ரீதியான விஷயத்தில் நன்மைகளை பெறுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் வேகமாக முன்னேற்றத்தை காணக்கூடிய நாள். உங்கள் எதிர்பாராத முன்னேற்றம் உங்களுக்கு ஆச்சரியத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள், திறமைகள் பெரிய சாதனையை படைக்க உதவும். முன்னேற்றம் பெரிய அளவில் இருக்கக்கூடிய நாள். இந்த நாளின் பிற்பகுதியில் உங்களுக்கு மதிப்பும் நற்பெயர் கிடைக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படவும். முதலீடு தொடர்பாக இருமுறை யோசித்து செயல்படுவது நல்ல லாபத்தை தரும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தின் நலனில் நீங்கள் அக்கறை கொண்டு செயல்பட வேண்டிய நாள். இன்று உங்களுடைய உடன் பிறந்தவர்களை கவனித்துக் கொள்வதில் நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தின் தேவைகள் அதிகரிப்பது உங்களுடைய நிதிநிலைக்கு தொந்தரவாக அமையலாம். வீடு, வேலை மாற்றம் தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை தொடர்பான விஷயத்தில் உங்களுடைய ஆளுமை திறன் வெளிப்படும். தைரியமாக சூழ்நிலை கையாள்வீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று, வியாபாரம் தொடர்பான கவலைகள் உங்களை குறிப்பாகத் தொந்தரவு செய்யும்.எனவே நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் தொடர்பாக ஒழுக்குத்துடன் மற்றும் முறையான திட்டமிடல் உங்களுக்கு உதவும். சோம்பலை விடுத்து புத்துணர்ச்சியுடன் செயல்படவும். இந்த பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். இன்று நீங்கள் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக மற்றும் உங்கள் ஆசைகளை தீர்த்துக் கொள்ள பணம் செலவிடுவீர்கள்.உங்களுடைய வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதி ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பது உங்களுடைய செயல்பாடுகளை முன்னேற்ற உதவும். இன்று எந்த ஒரு முடிவுகள் எடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று உங்கள் வேலை வியாபாரம் தொடர்பாக உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சில புதிய ஒப்பந்தங்கள் பெற வாய்ப்பு உண்டு. நீண்ட காலமாக நீங்கள் செய்து வரக்கூடிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். நீங்கள் விரும்பாத அல்லது நம்பிக்கை இல்லாத எந்த ஒரு ஒப்பந்தத்திலும் ஈடுபட வேண்டாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் மனதில் எந்தவித காரணமும் இன்றி சில கலக்கம் ஏற்படும். சுக்கிரனின் அமைப்பு மற்றும் கிரகங்களின் அமைப்பு இன்று உங்களுக்கு சற்று சாதகமற்றதாக இருக்கும். இதனால் நீங்கள் நினைத்த வேலையை முடிக்க திட்டமிடல் மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடு தேவை. தொழில் துறையில் நீங்கள் எதிரிகளை சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் தைரியமாகவும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவது நல்லது. எந்தவித தீய பழக்கத்திலிருந்து விலகி இருப்பது அவசியம். உங்களுடைய கருத்துக்களை யார் மீதும் திணிக்க வேண்டாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத ஒரு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் செய்து வரும் வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக மன அழுத்தம் தர வாய்ப்பு உண்டு. பணி சூழல் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். சிலருடன் பழைய மோதல் அல்லது சிக்கலில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். மேலதிகாரிகளுடன் நல்லிணக்கம் உண்டாகும். உங்கள் மனதிற்கு சோர்வு தரக்கூடிய எந்த ஒரு எண்ணத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று, ஒரு சிலருடைய புதிய அறிமுகத்தின் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். உங்கள் கடந்த காலத்தை ஆராய்வதும், உங்களுடைய அனுபவம் உங்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம். நீண்ட காலமாக முடங்கி கிடந்த பணத்தை மீட்டெடுப்பது மற்றும் தடைபட்டு வந்த வேலைகளை முடிக்க சிரமப்படுவீர்கள். இன்று பணியிடத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால் முன்னேற்றத்தை காண முடியும். வருமானம் சிறப்பாக இருக்கும் என்றாலும், அதை சரியாக சேமிக்க பழகவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று, சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். இது உங்களுடைய மதிப்பை உயர்த்தும். கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்த சாதகமாக அமையும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் அல்லது விற்பனை தொடர்பாக கொள்முதல் மற்றும் விற்பனை சார்ந்த வணிகங்கள் லாபகரமாக அமையும். இன்று நாள் முழுவதும் பல நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். இன்று நண்பர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களுடைய செயல்பாடுகளில் மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். புனித ஸ்தலத்திற்கு யாத்திரை செல்ல வாய்ப்புகள் உண்டு.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும், பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பீர்கள். இது உங்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழிலில் சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. நீண்ட காலமாக ஒரு சொத்து வாங்குவது, வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவான் உங்களுக்கு நன்மைகளையும் ஞானத்தையும் தரக்கூடியவராக அமையவார். முன்னேற்றத்திற்கான பல வழிகளை நீங்கள் பெறுவீர்கள். கல்வி ஆன்மிகம் மீது உங்களுடைய ஆர்வம் இருக்கும். உத்தியோகத்தர்கள் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுப்பது அல்லது யாரிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் பெற்றோரும், குருமார்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.உங்களுடைய துணை மற்றும் குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்லவும்.