உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!

உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!

தமிழர் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் 7வது நாள் திருகோணமலையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - கட்டைபறிச்சான் கிராமத்தில் இன்று (21) காலை இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரதான சுடரேற்றப்பட்டதன் பின்னர் தியாகத் தீபம் திலீபனின் திரு உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த இவ் நினைவவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்! | Thileepan 39Th Commemoration In Trinco

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.