திரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா!

திரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா!

நடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாக இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  இதன் காரணமாக  திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  ‘

அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ராதிகா, “இவ்வளவு தூரம் வருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு  என் சிறந்த முயற்சியைத் தந்தேன். தொடர்ந்து என் வேலையை வளர்த்தேன்.

அதுதான் எனக்கு இந்தப் பயணத்தைத் தந்திருக்கிறது. பலருக்கு மகிழ்ச்சியை,  நம்பிக்கையை,  துணிச்சலைத் தந்திருக்கிறது. எனக்கு அன்பையும் வலிமையையும் தந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி”  எனத்   தெரிவித்துள்ளார்.