மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சிலிருந்து பறந்த வழிகாட்டுதல்

மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சிலிருந்து பறந்த வழிகாட்டுதல்

சில மாவட்டங்களில் மாணவர்களிடையே பரவி வரும் மூளைக்காய்ச்சலைத் தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வெளியிட்டுள்ளது.

இந்த நோய் முக்கியமாக குழந்தைகளையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் பாதிக்கிறது என்றும், கடந்த ஏப்ரல் மாதம் மாத்தறை மாவட்டத்தின் தெனியாயா பகுதியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களே அதிகளவில் பாதிப்பு

மேலும், நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் இந்த நோய் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சிலிருந்து பறந்த வழிகாட்டுதல் | Guidelines For Education Bosses Control Meningitis

 

அதன்படி, நோய்ப்பரவல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள், நோயாளிகள் குழுக்களாகவும், குறிப்பிட்ட இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலும் பள்ளி மாணவர்களே இனம்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.