விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பித்த பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணியினை பொறுப்பேற்க முன்னர் நாடாளுமன்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இணையம் ஊடாக விண்ணப்பபடிவத்தினை (Online Registration System) பூர்த்தி செய்து நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
பிரமரினால் விண்ணப்படிவம் பூர்த்தி செய்யப்படும் போது நாடாளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க, உதவி பொது செயலாளர் டிகிரி ஜயதிலக்க உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
எதிவரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை (Online Registration System) மூலம் பதிவு செய்யும் நடவடிக்கை நாடாளுமன்ற பொது செயலாளரினால் அறிமுப்படுத்தப்பட்டுள்ளது.