சந்நிதி - கதிர்காமம் பாதயாத்திரை விசேட பூசை நிகழ்வுகளுடன் ஆரம்பம்!

சந்நிதி - கதிர்காமம் பாதயாத்திரை விசேட பூசை நிகழ்வுகளுடன் ஆரம்பம்!

கதிர்காம கந்தனின் வருடாந்த பெருந்த் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சன்னதி முருகன்  ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும்  பாதயாத்திரை இன்றைய தினம் காலை 9 மணியளவில் செல்வச் சந்நிதி முருகன்  ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட வடிபாடுகளள் இடம் பெற்றதனை தொடர்ந்து செல்வ  சந்நிதி  முருகன் ஆலய பிரதமர் ஆர்ச்சகரால்  கத்திர்காமம் செல்லும் யாத்திரிகர்களிடம்  வேல்  கையளிக்கப்பட்டதை தொடர்ந்து யாத்திரிகர்கள் சன்னதியான்  ஆக்கிரமத்திற்கு சென்றன.  அங்கும்  விசேட பூஜைகள், நிகழ்வுகள் இடம்பெற்றது.

அங்கு யாத்திரிகர்களுக்கான  உதவிகளை சன்னதியான் ஆச்சிர்க்மம்  வழங்கியது. அதனை  தொடர்ந்து அடியவர்கள் கதிர்காமத்திற்கான   முதல் நாள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர

பாரம்பரியம் மிக்க சந்நிதி முருகனிலிருந்து  கதிர்காமத்திற்கான பாதயாத்திரை 46 தினங்கள், 815 கிலோமீற்றர் கொண்ட மிக நீண்ட நெடும்  நடைபயணமாகும்.

வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களை கடந்து செல்லும் குறித்த பாத யாத்திரையில்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல ஆகிய மாவட்டங்களை சேர்த்த பல நூற்று கணக்கானோர் வழி நெடுகிலும் இணைந்து கொள்வது வழமையாகும்.

கதிர்காம கந்தன்  ஆலய கொடியேற்றம் 2026 ஆடி 15 அன்று ஆரம்பமக்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.