வெடித்துச் சிதறும் எரிமலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெடித்துச் சிதறும் எரிமலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது அங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.