பிரதமரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!

பிரதமரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!

பிரதமரின் புதிய செயலாளர் காமினி செனரத் அவர்கள் இன்று ( செவ்வாய்க்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றார்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் காமினி சேதர செனரத், அவரது கூடுதல் செயலாளராகவும், தலைமை அதிகாரியாகவும் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015 வரை பணியாற்றியதுடன், 2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக சேவையாற்றிய காலப்பகுதியில் பிரதமரின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான அவர், களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவார்.

இலங்கை நிர்வாக சேவையில் உதவி பிரதேச செயலாளராக இணைந்த அவர் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பதவிகளையும் வகித்துள்ளார். மேலும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது