அரச பேருந்து சாரதியின் கவனயீனம்: பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

அரச பேருந்து சாரதியின் கவனயீனம்: பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதியின் கவனயீனத்தினால் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

முதியவர் ஒருவர் பயணம் செல்லும் முகமாக வவுனியாவின் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அங்கு தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு சொந்தமான பேருந்து பின்பகுதி நோக்கி செலுத்தப்பட்டிருந்தது.

இதன்போது பேருந்தின் பின்பகுதியில் நின்றிருந்த முதியவரை மோதிதள்ளியது. விபத்தில் படுகாயமடைந்த முதியவர் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர்சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த சாரதியின் கவனயீனமான முறையில் பேருந்தை செலுத்தியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.