CASA 7s ரக்பி கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை

CASA 7s ரக்பி கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை

உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று (17) தமதாக்கியுள்ளது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், அண்டை நாடான இந்திய அணியை 31-10 என்ற புள்ளிகள் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தி இலங்கை வீரர்கள் அபார வெற்றி பெற்றனர். 

போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்திய இலங்கை அணி, ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 14-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.