Tamil Nadu Election Results Live: ஆட்சியை நெருங்கும் விஜய் - லைவ் அப்டேட்ஸ்
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தொகுதி முன்னிலை நிலவரத்தின்படி தவெக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக 2வது இடத்திலும் திமுக 3வது இடத்திலும் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 50 லட்சம் வாக்குகளை த.வெ.க. பெற்றுள்ளது.
தவெக கட்சி அலுவலகத்திற்கு வெளியே தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மொத்தமுள்ள 234 இடங்களில் தற்போது 112 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.