BJP 2026 election performance: பா.ஜ.க-வுக்கு பின்னடைவு; முன்னிலை வகிக்கும் நயினார் நாகேந்திரன்

BJP 2026 election performance: பா.ஜ.க-வுக்கு பின்னடைவு; முன்னிலை வகிக்கும் நயினார் நாகேந்திரன்

Tamil Nadu Election 2026 BJP Performance and Current Seat Projections: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 'இந்த முறை தமிழகத்தில் தனது கால்தடத்தை ஆழமாகப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க, இந்த  தேர்தலில் 27 இடங்களில் போட்டியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி,சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மற்றும் மயிலாப்பூர் தொகுதியில் களம் கண்ட தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் கவனம் பெற்றுள்ளது. 

பா.ஜ.க இந்த முறை தமிழகத்தில் இரட்டை இலக்க இடங்களில் வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். 

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும், 'மாற்று அரசியல்' என்ற கோஷத்துடன் களம் கண்ட பாஜக, தமிழக சட்டமன்றத்தில் ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.