மான் கொம்புகளுடன் நபரொருவர் கைது

மான் கொம்புகளுடன் நபரொருவர் கைது

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் 18 மான் கொம்புகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த பகுதியில் மானின் இரண்டு கால்கள், ஏராளமான சிப்பிகள் மற்றும் மலைப்பாம்பு ஒன்றும் இருந்ததாக நுவரெலிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா விடுதியின் முகாமையாளர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.