மன்னார்-மடு திருத்தல திருவிழாவிற்கு பிரவேசிக்கும் மக்களுக்கான அறிவிப்பு

மன்னார்-மடு திருத்தல திருவிழாவிற்கு பிரவேசிக்கும் மக்களுக்கான அறிவிப்பு

மன்னார் - மடு திருத்தல ஆவணி மாத திருவிழாவிற்காக பிரவேசிக்கும் மக்கள், தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் சிறிய பயணப்பொதிகளுடன் மாத்திரம் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை நற்கருணை ஆராதனை வழிபாட்டுடன் திருப் பவணியும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.