
கொழும்பில் எதிர்பாராத முடிவுகளை தந்த தாமரை மொட்டு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் பலரும் எதிர்பார்த்த வேட்பாளர்கள் பின்னடைந்த நிலையிலும், விமர்சிக்கப்பட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும், இலங்கை ஆராய்ச்சி மற்றும் அரசியல் பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கான கொழும்பில் விருப்பு வாக்குகளில் முதல் இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விமல் வீரவன்ச இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
போர் வீரன் என்று குறிப்பிடப்படும் சரத் வீரசேகர விருப்பு வாக்குகளால் எதிர்பாராத வெற்றியை கொழும்பில் பதிவுசெய்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கடுமையான விமர்சனங்களை மீறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொலன்னறுவை மாவட்டத்தில் விருப்புவாக்குகளில் முதல் இடத்தை வென்றுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைவர் ரோஷன் ரணசிங்க இரண்டாவது இடத்தில் உள்ளார்.