தேசிய ரீதியில் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்பு!

தேசிய ரீதியில் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்பு!

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விசேட திறமைகளுடன் கூடியவர்களும் மற்றும் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள் எமது நாட்டில் உருவாகியிருப்பினும், நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் அவர்கள் இடைநடுவில் தமது விளையாட்டுத் துறையிலிருந்து விலகிச் செல்கின்ற போக்குக் காணப்படுகின்றது. 

அத்துடன், இந்நிலைமையானது, வீர வீராங்கனைகளின் திறன்களைத் தக்கவைத்தல், உயரிய செயலாற்றுகையைப் பேணுதல் மற்றும் சர்வதேச ரீதியான போட்டித்தன்மையை தக்கவைப்பதற்காக இலங்கைக்குள்ள இயலுமைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 

வீர வீராங்கனைகளுக்கு முப்படையில் வழங்கக்கூடிய வாய்ப்புக்கள் போதியளவு மட்டத்தில் இல்லாமை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் காணப்படும் விளையாட்டுத் துறைசார் நிரந்தரத் தொழில் வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 

அதனால், தேசிய விளையாட்டு துறையில் உயர்மட்ட திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீர வீராங்களைகளைத் தக்கவைத்தல் மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் வீர வீராங்கனைகளின் நீண்டகால தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, நியாயமான, திறமைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்ந்தெடுத்தல் செயன்முறை மூலம் அரச, பகுதி அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குப் பொருத்தமான கொள்கைச் சட்டமொன்றை தயாரிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.