அமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு (11-8-1984)

அமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு (11-8-1984)

தனது குரலை சோதிப்பதற்காக வானொலி ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ரீகன் கூறியது: எனது சக அமெரிக்கர்களே ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும் என்றார். இந்த பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் குரல் பரிசோதனைக்குதான் என்பதை அறிந்தபின் நிம்மதி அடைந்தனர். மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் அமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு (11-8-1984) தனது குரலை சோதிப்பதற்காக வானொலி ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ரீகன் கூறியது: எனது சக அமெரிக்கர்களே ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும் என்றார். இந்த பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் குரல் பரிசோதனைக்குதான் என்பதை அறிந்தபின் நிம்மதி அடைந்தனர். மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது. * 1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர். * 1960 - பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது. * 1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். * 1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது. * 1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர். * 1975 - போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார். * 1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது. * 2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின. * 2003 - ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார். * 2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.