இன்றைய ராசிபலன் (31.03.2026): தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-
கிழமை: செவ்வாய் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 17

ஆங்கில தேதி: 31

மாதம்: மார்ச்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03-57 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி: இன்று காலை 7-46 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்

நல்ல நேரம்: காலை 07-30 to 08-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்: காலை 9-00 to 10-30

குளிகை: காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

 

மேஷம்

நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

 

ரிஷபம்

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும் தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

 

மிதுனம்

வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தொழில் அதிபர்கள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

 

கடகம்

பணப் பிரச்சினை இருக்காது. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகத் தோற்றம் பளிச்சிடும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

 

சிம்மம்

தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

 

கன்னி

உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

 

துலாம்

அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும் மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

 

விருச்சிகம்

பணப்பற்றாக்குறை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

 

தனுசு

வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

 

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

 

கும்பம்

விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. உடல் நலம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

 

மீனம்

பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். தம்பதிகளிடத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்...