
யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதிய மிகப்பெரிய உயிரினம் - பின்னர் நடந்த விபரீதம்
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் ரயிலில் மோதுண்ட யானையொன்று பலியாகியுள்ளது. கனகராயன்குளம் ஆலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கனகராயன்குளம் ஆலங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது குறித்த ரயிலில் யானை மோதுண்டுள்ளது, அதனை தொடர்ந்து ரயில் தடம்புரண்டுள்ளது.
யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் ரயில் தடம் புரண்டமையினால் பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் குறித்த ரயில் பல மணி நேரங்களின் பின்னர் மீள பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.