இலங்கையில் பிரம்மாண்டமாக உருவாகும் “CHINA S.W”

இலங்கையில் பிரம்மாண்டமாக உருவாகும் “CHINA S.W”

ஹம்பாந்தோட்டையில் “சீனா எஸ்.டபிள்யூ (CHINA S.W)” என்ற எழுத்துக்களை உச்சரிக்கும் வகையில் பிரம்மாண்டமான கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்களும் புகைப்படங்களும் பரப்பப்படுகின்றன.

ஹம்பாந்தோட்டை - சூரியவெவ பகுதியை கூகுள் உதவி கொண்டு தேடிய பொழுது குறித்த கட்டடங்கள் தொடர்பான படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கட்டடங்கள் ஹம்பாந்தோட்டையில் மிரிஜ்ஜவில - சூரியவெவ சாலையில் அமைந்துள்ள சீனா எஸ்.எல்.கே ஹார்பர் சேவைக்கு சொந்தமானவை என அடையாளம் காணப்படுகிறது.