சில நிமிடங்களுக்குள் மேலும் 02 பேருக்கு கொரோனா

சில நிமிடங்களுக்குள் மேலும் 02 பேருக்கு கொரோனா

நாட்டில் இன்றைய தினம் 2 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2869 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 14 பேர் இன்றைய தினம் குணமடைந்துள்ளனர்.

இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2593 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனாவால் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.