ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவரின் வங்கி கணக்கில் 18 கோடி ரூபாய் பரிமாற்றம்..!
ஹோகந்தர - சிங்கபுர பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஒருவரின் வங்கி கணக்கில் ஒரு வருட காலப்பகுதியினுள் 18 கோடி ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
25 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலங்கம காவல்துறையின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
37 வயதான சந்தேகநபர் நாளைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.