புதிய சபாநாயகர் தொடர்பில் வெளியாகிய தகவல்!

புதிய சபாநாயகர் தொடர்பில் வெளியாகிய தகவல்!

ஒன்பதாவது நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாபா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 80,595 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வானது எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ள நிலையில் இதன்போது அவர் புதிய சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

74 வயதான மஹிந்த யாபா அபேவர்தன 1983 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

நேற்றைய தினம் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்க்ஷ பதவி ஏற்றுள்ள நிலையில், சபாநாயகர் யார் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு வெளியாகாத நிலையில் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாபா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெகவல் ஒன்று வெளியாகியுள்ளது.