நீண்டகாலமாக தேடப்பட்ட கும்பல் நெல்லியடிப் பொலிஸாரிடம்!

நீண்டகாலமாக தேடப்பட்ட கும்பல் நெல்லியடிப் பொலிஸாரிடம்!

நெல்லியடியில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பொலிஸாசாரிடம் சிக்கியுள்ளது. நெல்லியடி பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையையடுத்தே இந்த கும்பல் சிக்கியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெல்லியடியில் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்ட கும்பலபல் திருடப்பட்ட பொருட்களுடன் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில், சைக்கிள் 2, தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று, கதிரைகள் 10, மின்விசிறி ஒன்று எனப் பல பொருட்களை திருடியுள்ளனர்.

அத்துடன் 18 விலையுயர்ந்த போன்கள், ஐ பாட் ஒன்று ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் நெல்லியடி பொலிசார் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.