கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கமைய, குறித்த பிரதேசங்களுக்கான மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலக பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பன பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவுக்கான சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலக பிரிவுக்கும், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பிபில பிரதேச செயலக பிரிவுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.