பெற்றோருக்கு இடையிலான மோதலின் மகளுக்கு நேர்ந்த துயரம்
பொலநறுவையில் வீடொன்றில் பெற்றோருக்கு இடையே நடந்த சண்டையின் போது, 12 வயது மகள் படுகாயமடைந்துள்ளார்.
ஹிங்குராக்கொடயில் மனைவியை கத்தியால் தாக்க கணவன் முயற்சித்த போது அது மகளின் தலையில் குத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனால் மகள் படுகாயமடைந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.