
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவு
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை நாடாளுமன்றில் அமர்வதற்கு முன் சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இவர்கள் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அந்தந்த மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையம் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல வேட்பாளர்கள் ஏற்கனவே தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சொத்து விபரங்களை இன்னும் சமர்ப்பிக்காத மீதமுள்ள உறுப்பினர்கள், இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுத் தேர்தலில் வெற்றி பெறாத வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
இதேவேளை நடந்து முடிந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 196 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.