மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை ; அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை ; அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,700 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை ; அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் | Gold Prices Rose Again Today

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.