வாகரை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

வாகரை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

திருகோணமலை - வாகரை கடற்கரையில் நேற்று உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அதேவேளை சீரற்ற காலநிலையில் சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்து கடற்படை வீரர்கள் தொடுவாய் வெட்டச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

வாகரை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் | Body Found Trincomalee Beach

இவர்களை பல நாட்களாக கடற்படை தேடி வருகின்ற நிலையில் நேற்றைய தினம் திருகோணமலை வாகரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில் கரையொதுங்கிய சடலம் காணாமல்போன கடற்படை வீரர்களில் ஒருவருடையதான இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சடலத்தை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.