மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (04) பதிவாகியுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிவான் அனுமதியைப்பெற்று சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.