சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முக்கிய அவதானம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முக்கிய அவதானம்

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் அவதானம் செலுத்தி வருகிறது.

சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி கைதிகளை பார்வையிட அனுமதிக்கலாமா என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சிறைச்சாலைகள் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களின் பரிந்துரைகளும் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கொவிட் 19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள கைதிகளை வெளியாட்கள் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்குப் பின்னரே புதிய முறைமைகளை செயல்படுத்த எண்ணியுள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.