பொதுத்தேர்தல் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம்- பிருத்தானிய கொன்சவேற்றிவ் கட்சி
பொதுத் தேர்தல் பெறுபேறுகள் இலங்கையின் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிருத்தானிய கொன்சவேற்றிவ் கட்சியின் பிரபு லோட் நெசிபி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் ஆரம்ப கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன அகற்றப்பட்டு தற்போது இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய புதிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென அவர் பாராட்டியுள்ளார்.
இதன் மூலம் சகல சமூகங்களும் ஒன்றிணைந்து இலங்கையினை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும் என தாம் நம்புவதாகவும் பிருத்தானிய கொன்சவேற்றிவ் கட்சியின் பிரபு லோட் நெசிபி குறிப்பிட்டுள்ளார்