அலுவலக ரயில் சேவை குறித்து வௌியான அறிவிப்பு

அலுவலக ரயில் சேவை குறித்து வௌியான அறிவிப்பு

அவசர அனர்த்த நிலைமை காரணமாக, 39 ரயில் தொகுதிகளை சேவைக்காக மீண்டும் கொழும்புக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அலுவலக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்தினம் ரம்புக்கனை, பொல்கஹவெல, குருநாகல், கண்டி, சிலாபம், புத்தளம் மற்றும் கணேவத்தை ஆகிய ரயில் நிலையங்களுக்குச் சென்ற 39 ரயில் தொகுதிகளே இவ்வாறு சிக்குண்டுள்ளன. ரயில் பாதைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் இவற்றை மீண்டும் கொழும்புக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன் காரணமாக, தற்போதைய பயணிகள் நெரிசலுக்கு ஏற்றவாறு ரயில் சேவைகளை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளதாக, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.