வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி ஆரம்பம்; டிசம்பர் 4 முதல் மழை அதிகரிப்பு

வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி ஆரம்பம்; டிசம்பர் 4 முதல் மழை அதிகரிப்பு

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, டிசம்பர் 04 ஆம் திகதி முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.