உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில், மீதமுள்ள பாடங்களை 2026 ஜனவரி முதல் வாரத்தில் நடத்த பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி பீடங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Advanced Level Examinations Date Announcement

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது நிலைமைகள் சாதாரணமடைந்து வரும் நிலையில், குறித்த பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.