கேகாலையில் மண்சரிவு: நால்வர் மாயம்; 20 வீடுகளுக்கு சேதம்!
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல கோவில் கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கேகாலை மாவட்ட மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, சுமார் 20 வீடுகள் மண்சரிவால் சேதமடைந்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியிலுள்ள பல குடும்பங்கள் அவசரகால தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பதுளை பெல்கத்தேன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.